×

காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களை தூர்வார ரூ.110 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களை தூர்வார ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர்; நீரினைச் சேமித்து பாசனத்தினை மேம்படுத்தும் நோக்கத்தில் கதவணைகள், நீரொழிங்கிகள், தடுப்பணைகள், கால்வாய்கள், ஏரிகள் அமைத்தல், மாநிலத்திற்குள் நதிகளை இணைத்தல், நிலத்தடிநீரைச் செறிவூட்டுதல் போன்ற பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.

முதலமைச்சரின் உத்தரவுப்படி, வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டிலேயே ஒவ்வொரு ஆண்டும் தேவையான நிதியினை ஒதுக்கி, தென்மேற்குப் பருவ மழை துவங்கும் முன்பே, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காவிரி நீர் கடைமடை வரை செல்வது உறுதி செய்யப்படுகிறது. 2024-2025ஆம் ஆண்டில், காவிரி டெல்டா பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன், 5,338 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களைத் தூர்வாருவதற்கு, 110 கோடி ரூபாய் செலவில், 919 பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

The post காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களை தூர்வார ரூ.110 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : caviar delta ,Minister ,M. R. K. Paneer Selvam ,Chennai ,Kaviri Delta ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...