×

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்..!!

சென்னை: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் தேர்வாய் கண்டிகை ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு, குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஏரிகளின் நீர் இருப்பு பின்வருமாறு,

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,411 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான1,081 மில்லியன் கனஅடியில் 757 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39.55 அடியாக உள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 35 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

சென்னை குடிநீர் ஏரிகளில் 79.27% நீர் இருப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 79.27 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் 9.320 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் -83.92%; புழல்-73.06%; பூண்டி-80.93%; சோழவரம்-70.03%; கண்ணன் கோட்டை ஏரி-95.06% நீர் இருப்பு உள்ளது.

The post சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sembarambakkam ,Puzhal ,Bundi ,Cholavaram ,Cholawai Kandigai ,
× RELATED நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14...