×

14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு

சென்னை: 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர்; தமிழ்நாட்டில் சுமார் 60 இலட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துப் பயிர்கள், பருத்தி, தோட்டக்கலைப் பயிர்கள் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் இந்நிலங்கள் ஊட்டச்சத்துக் குறைபாடும், குறைந்த நீர்ப்பிடிப்புத்திறனும் கொண்டதாக உள்ளதால், நிலத்தடி நீர் குறைந்து பயிர் உற்பத்தித் திறனும் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. இம்மானாவாரி நிலங்களில் விவசாயிகள் இலாபகரமான பயிர் சாகுபடி மேற்கொள்வதற்கு ஏதுவாக, உழவு மேற்கொள்ளவும், சிறுதானியங்கள், பயறுவகைகள் எண்ணெய்வித்துக்கள் பயிரிட விதைகளும் வழங்கப்படும். 2024-2025-ஆம் ஆண்டில், மூன்று இலட்சம் ஏக்கரில் இத்திட்டத்தை செயல்படுத்த, 36 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

The post 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,M. R. K. Paneer Selvam ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...