×

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.215 வழங்கப்படும் எனவும் சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை மேம்படுத்த ரூ.12.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் அறிவித்துள்ள அறிவிப்புகள்; “பயிர் உற்பத்தி திறனை உயர்த்த ரூ.48 கோடி மதிப்பில் ஊக்குவிப்பு திட்டம் செயல்படுத்தப்படும், முக்கிய பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் பரப்பை விரிவாக்கம் செய்ய ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு, விவசாயிகள் வருவாய் இழப்பிலிருந்து மீண்டு வர பயிர்க் காப்பீடு திட்டம் ரூ.1,775 கோடியில் செயல்படுத்தப்படும்” என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

The post கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,Chennai ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...