×

வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்கு காங்கிரஸ் அடித்தளமிடும்: ராகுல் காந்தி பதிவு

டெல்லி: இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்களுக்கு நீதி வழங்குவதன் மூலம் வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்கு காங்கிரஸ் அடித்தளமிடும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; நரேந்திர மோடியின் இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பொதுப்பிரிவு ஏழைகளுக்கு இடமில்லை. நாட்டின் பட்ஜெட்டில் ஒவ்வொரு ₹ரூ.100க்கும், மூன்றில் இரண்டு பங்கு மக்களின் பங்கு வெறும் ரூ. 6 மட்டுமே. இந்த வகுப்பினருக்கு இழைக்கப்படும் கொடூரமான அநீதி, நாட்டை உள்ளிருந்து குழிபறிக்கிறது.

எனவே, நாட்டைப் பலப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் இரண்டு புரட்சிகரமான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது. முதல் படி சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, இது நாட்டின் எக்ஸ்ரே ஆகும். இரண்டாவது படி செல்வ வளங்களின் வரைபடமாகும், இது யாரிடம் என்ன, எவ்வளவு உள்ளது என்பதை அறிய உதவும். பின்தங்கிய மக்களில் மூன்றில் இரண்டு பங்கினரை நாட்டின் முன்னேற்றத்தில் பங்காளியாக்காமல் இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமற்றது. இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்களுக்கு நீதி வழங்குவதன் மூலம் வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்கு காங்கிரஸ் அடித்தளமிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்கு காங்கிரஸ் அடித்தளமிடும்: ராகுல் காந்தி பதிவு appeared first on Dinakaran.

Tags : Congress ,India ,Rahul Gandhi ,Delhi ,B. Rahul Gandhi ,Narendra Modi ,Dalits ,
× RELATED இந்திய அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ராகுல் காந்தி