×

ஜம்முவில் ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

ஸ்ரீநகர்: ஜம்முவில் ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கல்வி, சுகாதாரம், ரயில்வே, சாலை போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்படுகிறது. ஐஐடி ஜம்மு, ஐஐடி பிலாய், ஐஐடி திருப்பதி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு அர்ப்பணிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் சாலை, ரயில் இணைப்புத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். ஜம்முவில் பல்வேறு நலத்திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

ஜம்மு விமான நிலைய புதிய முனையக் கட்டடம், பெட்ரோலிய பொதுப்பயன்பாட்டுக் கிடங்கிற்கும் அடிக்கல் நாட்டுகிறார். ஜம்முவின் விஜய்பூரில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையையும் திறந்து வைக்கிறார். ஜம்மு விஜய்பூரில் 2019-ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் 227 ஏக்கர் பரப்பளவில் ரூ. 1660 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

 

The post ஜம்முவில் ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Jammu ,Srinagar ,Narendra Modi ,IIT Jammu ,IIT Pilai ,IIT ,Tirupathi ,Dinakaran ,
× RELATED பேரவை தேர்தல் நடத்தப்படும் ஜம்மு...