×

கீழப்பாவூர் அருகே ரூ.6 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி

பாவூர்சத்திரம்,பிப்.20: கீழப்பாவூர் அருகே பெத்தநாடார்பட்டி சித்திரபுத்திரனூரில் ரூ.6 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் மார்த்தாள் சுரேஷ் லிகோரி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், துணைத்தலைவர் ஜெயராணி அந்தோணிராஜ் முன்னிலை வகித்தனர். கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பிரதிநிதி முத்துராஜ், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆல்பின்ராய், தங்கமோகன், கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கீழப்பாவூர் அருகே ரூ.6 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Geezhapavoor ,Bhavoorchatram ,Bhoomi ,Puja ,Union Councilor ,Marthal Suresh Ligori ,Panchayat Council ,President ,Jayarani Kalaichelvan ,Vice President ,Jayarani Anthony Raj ,
× RELATED கீழப்பாவூர் சுற்றுவட்டாரத்தில் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைவு