×

காஸ் சிலிண்டர் விலையேற்றம் எதிரொலி புளியடி நவீன எரிவாயு தகனமேடை கட்டணம் உயருகிறது

நாகர்கோவில், பிப்.20: காஸ் சிலிண்டர் விலையேற்றம் காரணமாக நாகர்கோவில் மாநகராட்சியின் நவீன எரிவாயு தகன மேடை கட்டணத்தை உயர்த்தி வழங்க வழிவகை செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான புளியடி பகுதியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகன மேடையின் பராமரிப்பு பணியை தேசிய சேவா சங்கம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சடலம் ஒன்றுக்கு எரிக்கும் கட்டணம், எரிபொருள் மற்றும் இதர செலவீனம் a2500 வசூலிக்கப்பட வேண்டும் என்றும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்பிஜி தகன மேடைக்கும் சடலம் ஒன்றுக்கு a2500 வசூலிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த 2023ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை மூன்றாண்டு காலத்திற்கு பராமரிக்கப்பட வேண்டும் என்று மாநகராட்சியால் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய சேவா சங்கம் தரப்பில் தற்போது இயங்கி வரும் இரண்டு எல்பிஜி தகன மேடைக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு விலை, வேலை ஆட்கள் சம்பளம் அதிகரித்துள்ளதால் தங்களால் a2500க்கு சடலத்தை எரியூட்ட முடியாத நிலை உள்ளது, விலை உயர்வினால் ஒரு காலாண்டுக்கு a1 லட்சத்து 67 ஆயிரத்து 236 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே ஒரு சடலத்திற்கு a5 ஆயிரம் வீதம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு ஒரு மணி நேரத்திற்கு கூடுதலாக ஒரு சடலம் எரியூட்ட ஒன்றரை மணி நேரம் ஆகும் என்றும், இதற்கு காஸ் சிலிண்டர் கட்டணம் a3028.50, மின் கட்டணம் a60, பணியாளர் கூலி a1000 மற்றும் இதர செலவுகள் a411.50 என்று a4500 என்று மாநகராட்சிக்கு அறிக்கை அளித்துள்ளார். அந்த வகையில் ஒரு சடலத்திற்கு a4500 நிர்ணயம் செய்து வசூலித்து தேசிய சேவா சங்கத்திற்கே அனுமதி வழங்க மாநகராட்சியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post காஸ் சிலிண்டர் விலையேற்றம் எதிரொலி புளியடி நவீன எரிவாயு தகனமேடை கட்டணம் உயருகிறது appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Nagercoil Corporation ,Puliyadi ,Nagercoil Corporation.… ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை