×
Saravana Stores

தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம்: 257 மனுக்கள் குவிந்தன

 

தேனி, பிப். 20: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து 257 மனுக்கள் பெறப்பட்டன. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். டிஆர்ஓ ஜெயபாரதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகை, புதிய வீட்டுமனைபட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளிட்ட 257 கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஷஜீவனாவிடம் அளித்தனர். இம்மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் விசாணை நடத்தி உரிய தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.68 ஆயிரத்து 400 மதிப்பில் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 840 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும் மற்றும் மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பயிற்சி பெற நன்கொடையாக பெறப்பட்ட 5 தையல் இயந்திரங்களையும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முகமதுஅலிஜின்னா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம்: 257 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Tags : Pip ,Deni District Collector's Office ,Theni District Collector's Office ,
× RELATED விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்