×

வெளிநாட்டு சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க கலெக்டரிடம் மனு

ராமநாதபுரம், பிப்.20: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை பகுதியை சேர்ந்த மீனவ குடும்பத்தினர் மனு அளிக்க வந்தனர். அப்போது ஆர்.எஸ்மங்கலம், திருவாடானை பகுதியை சேர்ந்த மீனவ குடும்பத்தினர் கூறும்போது, ‘‘திருப்பாலைக்குடியை சேர்ந்த கார்த்திக்(22), ஜேசு(43), மோர்பண்ணை கிராமத்தை சேர்ந்த சந்துரு(20), பாசிப்பட்டிணத்தை சேர்ந்த வினோத்குமார்(27) ஆகிய 4 பேரும் 3 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தொழில் செய்வதற்காக குவைத் நாட்டிற்கு சென்றனர்.

இவர்கள் சென்ற படகில் உடன் இருந்த ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு நபர் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதானார். அவருடன் இந்த 4 மீனவர்களையும் அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அவர்கள் சிறையில் உள்ளனர். இதுபோன்று திருப்பாலைக்குடியை சேர்ந்த சரவணக்குமார்(29), ரமேஷ்(37),முத்துகிருஷ்ணன்(45),மம்மது(48) மற்றும் மோர்பண்ணையை சேர்ந்த வைரச்செல்வன்(36) ஆகிய 5 பேரும் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஓமன் நாட்டில் உள்ள அல்மசீரா எனும் தீவுப்பகுதியில் மீன்பிடி ஒப்பந்த கூலி தொழில் செய்ய சென்றனர்.

ஆனால் 4 மாதங்களாக கூலி வழங்க வில்லை. பாஸ்போர்ட்டை தனியார் கம்பெனியர் வைத்துக்கொண்டு கொத்தடிமைகளாக நடத்தி வருவதாக குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். எனவே குவைத் நாட்டு சிறையில் உள்ள அந்த 4 மீனவர்கள், ஓமன் நாட்டில் பாஸ்போர்ட் கிடைக்காமல் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் 5 பேர் என 9 ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை இந்திய தூதரகம் மூலம் மீட்க மாநில, ஒன்றிய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post வெளிநாட்டு சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Collector ,Ramanathapuram ,People's Grievance Day ,Ramanathapuram Collector ,RS Mangalam, Thiruvadanai ,R.Esmangalam ,Thiruvadan ,Thirupalaikudi ,
× RELATED ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை