×

திருமங்கலம் அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பலி

திருமங்கலம், பிப். 20: திருமங்கலம் அருகே நடந்த டூவீலர் விபத்தில் உறவினர் திருமணத்திற்கு சென்று திரும்பிய கட்டிட தொழிலாளி உயிரிழந்தார். மதுரை சின்னஉடைப்பு அருகேயுள்ள பாப்பன் ஓடை கிராமத்தினை சேர்ந்தவர் பாலமுருகன் (30). கட்டிடத்தொழிலாளி. இவர் நேற்று திருமங்கலம் அருகேயுள்ள நாகையாபுரத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு டூவீலரில் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

திருமங்கலம்- ராஜபாளைம் நான்கு வழிச்சாலையில் தனியார் நிறுவனம் அருகே வந்த போது டூவீலரில் இருந்து நிலைதடுமாறி பாலமுருகன் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்ததும் திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த பாலமுருகனுக்கு மனைவி மற்றும் ஆறு மாத கைக்குழந்தை உள்ளனர்.

The post திருமங்கலம் அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Thirumangalam, Pip ,Duweiler ,Balamurugan ,Papan Oda ,Madurai Sinnudagh ,Naghiapuram ,
× RELATED பட்டம் விடும் போது தவறி விழுந்து...