×

சில்லி பாயின்ட்…

* பிப். 23ல் தொடங்கும் ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டங்களில் விதர்பா – கர்நாடகா, மத்திய பிரதேசம் – ஆந்திரா, மும்பை – பரோடா, தமிழ்நாடு – சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.
* காயத்தால் அவதிப்பட்டு வந்த கே.எல்.ராகுல் முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராகி உள்ளதால், ராஞ்சியில் நடக்க உள்ள 4வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
* ரோட்டர்டாம் ஏபிஎன் அம்ரோ ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதிய இத்தாலி வீரர் யானிக் சின்னர் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார்.
* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், காயம் அடைந்துள்ள கஸ் அட்கின்சனுக்கு (இங்கிலாந்து) பதிலாக இலங்கை வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீரா சேர்க்கப்பட்டுள்ளார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Vidarbha ,Karnataka ,Madhya Pradesh ,Andhra Pradesh ,Mumbai ,Baroda ,Tamil Nadu ,Saurashtra ,Ranji Cup ,KL Rahul ,Dinakaran ,
× RELATED முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பாஜவில் இணைந்தார்