×

உயர் கல்வி தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்வி செலவுக்கு ரூ.2 கோடி நிதி

 

உயர் கல்வி தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் அரசு ஏற்கும் கல்விக்கட்டண செலவுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரயைில் நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தற்போது மிக குறைந்த எண்ணிக்கையிலான மூன்றாம் பாலினத்தவர் மட்டுமே உயர் கல்வி பயின்று வருகின்றனர். எனவே, உயர் கல்வியை தொடர விரும்புட்ம மூன்றாம் பாலினத்தவரின் கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும். திருநங்கைகள் நல வாரியம் மூலம் நடைமுறைப்படுத்தவிருக்கும் இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ.2 கோடி நிதி கூடுதலாக அரசால் வழங்கப்படும்.

* கடைக்கோடி கிராம மக்களுக்காகரூ.1,000 கோடியில் சாலைகள்

தரமான சாலை வசதிகளை கடைக்கோடி கிராம மக்கள் எளிதில் பெற்றுப் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டில், 2000 கிலோ மீட்டர் சாலை மேம்பாட்டுப் பணிகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் அனைத்து குக்கிராமங்களும் அடிப்படை வசதிகளைக் கொண்டு தன்னிறைவு பெற்றிடும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-IIன் கீழ், 2024-25ம் ஆண்டில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.1,147 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

The post உயர் கல்வி தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்வி செலவுக்கு ரூ.2 கோடி நிதி appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Thangam Tennarasa ,Tamil Nadu Legislative Assembly ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன்...