×

கோவையில் மாபெரும் நூலகம், அறிவியல் மையம்: ‘முத்தமிழறிஞர் கலைஞர்‘ பெயரில்

 

முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கோவையில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை ஒன்றாகும். கோவை வாழ் பொதுமக்களிடையே குறிப்பாக, இளைய தலைமுறையினரின் அறிவுத்தாகத்தை மேலும், தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கோவையில் அமைக்கப்படும். இதில் உலகத்தரம் வாய்ந்த நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் இணைய வளங்களும் இடம் பெறுவது மட்டுமின்றி விண்வெளி, எந்திரவியல், மெய்நீகர் தோற்றம் இயற்கை அறிவியல் என பெல்வேறு அறிவிய் லமற்றும் பொறியியல் பிரிவுகளை சாந்த கண்காட்சிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* உயர் கல்வித்துறைக்கு ரூ.8,212 கோடி நிதி ஒதுக்கீடு

நாட்டிலேயே உயர் கல்வி சேர்க்கை விகிதம் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு கல்லூரிகளின் கட்டிடங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில் அரசு பொறியியல் கலை அறிவியல் மற்றும் பல வகை தொழில்நுட்ப கல்லூரிகளில் கட்டிடக்கட்டமைப்பு பணிகள் ரூ.200 கோடி செலவில் செயல்படுத்தப்படும். மேலும், ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்புடன் பொறியியல், பலவகை தொழில்நுட்ப கலை, அறிவியல் கல்லூரிகள் உட்பட 236 அரசு கல்வி நிறுவனங்களுக்கு கணினி மற்றும் இதர அறிவியல் கருவிகள் ரூ.173 கோடி செலவில் வழங்கப்படும்.

45 அரசு பல வகை தொழில்நுட்ப கல்லூரிகளை தொழில்துறை 4.0 தரத்திற்கு உயர்த்திட ரூ.3,014 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். பொறியியல் வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிதம் உள் ஒதுக்கீடு கடந்த 2021-22ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணம், விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம் என மொத்த கல்வி செலவையும் முழுமையாக அரசே ஏற்க்கிறது. இத்திட்டத்தின் கீழ் பல்வேறு தொழிற்படிப்புகளில் தற்போது படித்து வரும் 28,749 மாணவர்களின் கல்வி கட்டணத்திற்காக வரும் நிதியாண்டில் ரூ.511 கோடி ஒதுக்கீடு என பல்வேறு உயர் கல்வி திட்டங்களுக்கு, இந்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் உயர் கல்வித்துறைக்கு ரூ.8,212 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழின இரட்டை காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை 25 இந்திய மற்றும் உலக மொழிகளுக்கு சென்றடையும் வகையில் அவற்றை மொழிபெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பேரவையில் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழின் இரட்டை காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை 25 இந்திய மற்றும் உலக மொழிகளுக்கு சென்றடைய வகையில் அவற்றை மொழிபெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழில் பல புதிய படைப்புகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு சென்னை பன்னாட்டு புத்தக காட்சியை இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தியது. இதில் 40 நாடுகளில் இருந்து 75 க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தமிழ்ப் படைப்புகளை பிற மொழிகளுக்கு மொழி பெயர்க்க 483 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட மொத்தம் 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. உலக மொழிகளில் மொழி்பெயர்க்கப்பட்ட தமிழின மிகச்சிறந்த நூல்களை உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்கங்களிலும், புகழ்பெற்ற நூலகங்களிலும் இடம்பெற செய்ய இவ்வாண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும். தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிடச் செய்யும் இம்முயற்சிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கோவளம், எண்ணூர், பெசன்ட்நகர் கடற்கரையை மெருகூட்ட ரூ.100 ேகாடி: சென்னையில் சாலைகளை அகலப்படுத்த ரூ.300 கோடி

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்படும். சென்னையில் அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகள் அகலப்படுத்துவதற்காக கண்டறியப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக, புதிய ஆவடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலைகளை 18 மீட்டராகவும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலைகளை 30.5 மீட்டராகவும் வளர்ச்சி உரிமைப் பரிமாற்ற முறையில் அகலப்படுத்தும் திட்டம், சுமார் ரூ.300 கோடியில் செயல்படுத்தப்படும்.
மேலும், சென்னை கடற்கரையோரப் பகுதிகளை அழகுற சீரமைத்து மேம்படுத்திடும் நோக்கோடு கோவளம், எண்ணூர், பெசன்ட் நகர் ஆகிய கடற்கரை பகுதிகள் ரூ.100 கோடியில் புதிய வசதிகளுடன் மெருகூட்டி அழகுபடுத்தப்படும்.

* ‘தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்’ அமைக்க சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படும்

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்படும். சென்னையில் அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகள் அகலப்படுத்துவதற்காக கண்டறியப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக, புதிய ஆவடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலைகளை 18 மீட்டராகவும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலைகளை 30.5 மீட்டராகவும் வளர்ச்சி உரிமைப் பரிமாற்ற முறையில் அகலப்படுத்தும் திட்டம், சுமார் ரூ.300 கோடியில் செயல்படுத்தப்படும். மேலும், சென்னை கடற்கரையோரப் பகுதிகளை அழகுற சீரமைத்து மேம்படுத்திடும் நோக்கோடு கோவளம், எண்ணூர், பெசன்ட் நகர் ஆகிய கடற்கரை பகுதிகள் ரூ.100 கோடியில் புதிய வசதிகளுடன் மெருகூட்டி அழகுபடுத்தப்படும்.

* ‘தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்’ அமைக்க சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படும்

தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த முக்கிய சாலைக் கட்டமைப்புத் திட்டங்களை, சிறந்த மேலாண்மை முறைகளை பின்பற்றிச் செயல்படுத்திட, ஒரு சட்டப்பூர்வ அமைப்பை உருவாக்க முடிவெடுக்கப்பட்டு, ‘தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்’ அமைத்திடும் சட்ட முன்வடிவு நடப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம், அரசு தனியார் பங்களிப்புடன் மாநிலத்தில் சாலைக் கட்டமைப்பு வளர்ச்சிக்கான முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க இயலும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு ரூ.20,043 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post கோவையில் மாபெரும் நூலகம், அறிவியல் மையம்: ‘முத்தமிழறிஞர் கலைஞர்‘ பெயரில் appeared first on Dinakaran.

Tags : Giant Library ,Center ,Coimbatore ,Muthamizharinagar Kalyan ,Finance Minister ,Thangam Thannarasu ,Muthamizharinagar ,Legislative ,Assembly ,Thangam Tennarasa ,
× RELATED அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் பள்ளி...