×

நகர்ப்புற பசுமைத் திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பசுமை பரப்பு அதிகரிக்கப்படும்: 500 மின் பேருந்துகள் கொள்முதல்

நகர்ப்புற பசுமைத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பசுமை பரப்பு அதிகரிக்க மரங்கள் வளர்க்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்க வளர்ந்த மரங்கள் நடுவது. மியாவாக்கி காடுகள். பசுமைக்கூரைகள், செங்குத்துத் தோட்டங்கள். பசுமைச் சுரங்கப் பாதைகள், பசுமைத் திரைகள், நடைபாதைகளில் நடவடிக்கைகள் மரங்கள் அமைத்தல் மேற்கொள்ளப்பட பல்வேறு இருக்கின்றன. இப்பணிகள் பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு, நகர்ப்புற பசுமைத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் நடைமுறைப் படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் இந்நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதுமட்டுமன்றி ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்து இந்நிதியாண்டில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளிலும் போக்குவரத்துச் சேவையை வழங்கிடும் நோக்கில் மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் சிற்றுந்து திட்டம் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்படும். அத்துடன், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்துக் கட்டண மானியத்திற்காக 3,050 கோடி ரூபாய், மாணவர்களுக்கான பேருந்துக் கட்டண மானியத்திற்காக 1,521 கோடி ரூபாய் மற்றும் டீசல் மானியத்திற்காக 1,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

The post நகர்ப்புற பசுமைத் திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பசுமை பரப்பு அதிகரிக்கப்படும்: 500 மின் பேருந்துகள் கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Urban Greening Scheme ,Chennai Corporation ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...