×

அதிமுக அரசு பட்ஜெட் அறிவிப்புகள் புஸ்வாணம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை அளித்து மக்கள் பதில் அளிப்பர்: எடப்பாடிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக பட்ஜெட் மக்களுக்குப் பயன் தராது. திமுக அரசுக்கு 8,33,361 கோடி கடன் உள்ளது. கடன் பெற்றே ஆட்சியை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாகத் தமிழ்நாடு அரசு உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். மாளிகையின் பரணில் தூக்கிப் போடப்பட்டிருக்கும் அதிமுகவின் 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைத் தேடி எடுத்துப் படித்துப் பாருங்கள். 2011-2012ல் 1 லட்சத்து 30 ஆயிரத்து 630 கோடியாக இருந்த கடனைப் படிப்படியாக உயர்த்தி 2020-2021ம் ஆண்டில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடி ரூபாயாகக் கொண்டு வந்து நிறுத்தினீர்கள். ஒரு மாநில அரசு, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஆண்டுக்கு மூன்று விழுக்காட்டுக்கு மேல் கடன் வாங்க முடியாது. அதே சமயம் எந்தக் காலத்திலும் ஒட்டுமொத்தமாக 25 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்கிறது ஒன்றிய நிதி கமிஷன். இந்த வரம்பைத் தமிழ்நாடு அரசு இன்னும் தாண்டவில்லை.

திமுக அரசின் கடனைப் பற்றிக் கவலைப்படும் பழனிசாமி ஏன் மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்கவில்லை?2014ல் மன்மோகன் சிங் ஆட்சியில் 54 லட்சம் கோடியாக இருந்த கடன் பத்தாண்டில் 205 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறதே அதைப் பேசப் பழனிசாமியின் வாய்க்கு யார் பூட்டு போட்டார்கள்? ‘திமுக அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது, மக்களுக்குப் பயன் தராது’ எனச் சொல்லியிருக்கிறார். அது பயன் தரும் என நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை அளித்து மக்கள் சரியான தீர்ப்பு எழுதுவார்கள். கடந்த காலங்களில் அதிமுகவின் பட்ஜெட்டுகளில் வெளியான அறிவிப்புகள் புஸ்வாணமானதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி மறந்துவிட வேண்டாம்.

The post அதிமுக அரசு பட்ஜெட் அறிவிப்புகள் புஸ்வாணம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை அளித்து மக்கள் பதில் அளிப்பர்: எடப்பாடிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி appeared first on Dinakaran.

Tags : AIADMK government ,DMK ,Puswanam Parliamentary elections ,Finance Minister Thangam ,Southern government ,Edappadi ,Chennai ,Finance Minister ,Thangam Tennarasu ,Tamil Nadu ,DMK government ,Tamil Nadu government ,India ,Thangam ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி