×

சென்னையில் உலக புத்தொழில் மாநாடு

தமிழ்நாடு அரசு வரவு-செலவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

* முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் மேம்பாடு திட்டத்துக்கு(நீட்ஸ்) வரும் நிதி ஆண்டில் 101கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த நிதியினை வழங்குவதை உறுதிப்படுத்த ‘மின்னணு வர்த்த வரவுகள், தள்ளுபடி(டிரெட்ஸ்)’ தளத்தில் பெரும்மான்மையான பொதுத்துறை நிறுவனங்கள் இணைவது உறுதி செய்யப்படும்.

* உலகின் பல்வேறு பகுதிகளில் முத்திரை பதித்த, முன்னணி புத்தொழில் நிறுவனங்களும், இளம் தொழில் முனைவோர்களும் பங்கேற்கும் வகையில் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் ‘உலக புத்தொழில் மாநாடு’ சென்னையில் நடத்தப்படும்.

* குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 1,557 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

The post சென்னையில் உலக புத்தொழில் மாநாடு appeared first on Dinakaran.

Tags : World Industrial Conference ,Chennai ,Tamil Nadu Government ,World Innovation Conference in Chennai ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...