×

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு 2024-25க்கு ரூ.120 கோடி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த தொழில் முனைவோர்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 755 பேர், ரூ.84 கோடி மானியத்துடன் கூடிய ரூ.156 கோடி கடன் வசதி பெற்றுப் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பை கருதி திருத்த மதிப்பீடுகளில் கூடுதலாக ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2024-25ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கு ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சிஎம் ஏரிஸ் (CM Arise) என்ற புதிய திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு 35 சதவீத வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில்முனைவோர் கடன் பெறலாம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வரும் ஆண்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும். நகர்ப்புறப் பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் முழுமையான சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.230 கோடி நிதி ஒதுக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில் திருமணக் கூடம், உள்விளையாட்டுக் கூடம், கற்றல் மற்றும் பயிற்சி மையம் போன்ற வசதிகள் கொண்ட 120 சமூகக் கூடங்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

The post அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு 2024-25க்கு ரூ.120 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Dravidian ,Dinakaran ,
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...