×

ரூ.2 லட்சம் லஞ்சம் பி.எப். அதிகாரி கைது

நெல்லை: நெல்லை பெருமாள்புரம் என்ஜிஓ ‘பி’ காலனியில் அமைந்துள்ள மண்டல பிஎப் அலுவலகத்தில் அமலாக்க அதிகாரியாக கபிலன் என்பவர் இருந்து வருகிறார். இந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கொரோனா காலத்தில் அந்நிறுவனம் செலுத்த வேண்டிய பி.எப். தொகையை ஒன்றிய அரசு செலுத்தியது. ஆனால் தனியார் நிறுவனம் கொரோனா ஊரடங்கு காலத்திலும், தொழிலாளர்களின் சம்பளத்தில் பி.எப். தொகையை பிடித்தம் செய்ததாம். இதுகுறித்து சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. இதைத் தெரிந்து ெகாண்ட நெல்லை பிஎப் அலுவலக அமலாக்க அதிகாரி கபிலன் (55) தனக்கு ரூ.15 லட்சம் லஞ்சம் கொடுத்தால் இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்க மாட்டேன் என கூறினாராம்.

லஞ்சம் கொடுப்பதை விரும்பாத அவர் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகளின் வழிகாட்டலின்படி, சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் ரூ.2 லட்சத்தை லஞ்சமாக பிஎப் அமலாக்க அதிகாரி கபிலனிடம் கொடுத்ததார். அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் ரூ.2 லட்சம் லஞ்ச பணத்துடன் கபிலனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

The post ரூ.2 லட்சம் லஞ்சம் பி.எப். அதிகாரி கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kapilan ,Zonal PF Office ,Perumalpuram ,NGO 'B' Colony ,PF ,Union Government ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...