×

சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு அலுவலர்களுக்கு குறைந்த வாடகை புதிய குடியிருப்புகள்: ரூ.147 கோடியில் கட்ட திட்டம்

பூந்தமல்லி: அரசு அலுவலர்களுக்கு குறைந்த வாடகையிலான குடியிருப்புகளின் தேவை அதிகரித்து வருவதால், சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ரூ.147 கோடியில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் 95 பி மற்றும் 133 சி வகை குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: முன்னாள் ராணுவப் படை வீரர்களுக்கான சலுகைகளில், வீட்டுவரித் தொகையை மீளப்பெறும் சலுகை, தற்போது கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற படைவீரர் போன்ற சில பிரிவினருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

வரும் நிதியாண்டிலிருந்து. குடியிருப்புகள், சொத்துவரி, வீட்டுவரித் தொகையினை மீளப்பெறும் இத்திட்டத்தை அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கும் நீட்டிப்பு செய்து வழங்க ஆவன செய்யப்படும். இதனால், சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் முன்னாள் படைவீரர்கள் பயன் பெறுவர்.
கடந்த 3 ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்காக இதுவரை 27,858 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 32,709 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆக மொத்தம் இந்த அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10,000 பணியிடங்களை நடப்பு நிதி ஆண்டில் நிரப்ப உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. அரசு அலுவலர் குறைந்த வாடகையிலான குடியிருப்புகளின் தேவை அதிகரித்து வருவதால், சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ரூ.147 கோடியில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் 95 பி மற்றும் 133 சி வகை குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு அலுவலர்களுக்கு குறைந்த வாடகை புதிய குடியிருப்புகள்: ரூ.147 கோடியில் கட்ட திட்டம் appeared first on Dinakaran.

Tags : Saidapet Thadander Nagar ,Poontamalli ,Tamil Nadu ,Saitappettai Tadander Nagar ,Dinakaran ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்