×

மணிப்பூர் போலீஸ் ஏட்டு இடைநீக்க விவகாரம்; அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல வேண்டாம்: பழங்குடியினர் அமைப்பினரின் அழைப்பால் பதற்றம்

சுராசந்த்பூர்: மணிப்பூர் ஏட்டு இடைநீக்க விவகாரத்தை கண்டிக்கும் வகையில், அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல வேண்டாம் என பழங்குடியினர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் படிப்படியாக அமைதி திரும்பி வரும் நிலையில், சுராசந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை தலைமைக் காவலர் ஒருவர், ஆயுதம் ஏந்திய கும்பலுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். எஸ்பியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பழங்குடியினர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ‘அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு செல்ல வேண்டாம். தலைமைக் காவலர் சியாம்லால்பால் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். எஸ்பி சிவானந்த் சர்வே, துணை ஆணையர் தருண் குமார் ஆகியோரை உடனடியாக மாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளது. முன்னதாக கடந்த 15ம் தேதி தலைமைக் காவலர் இடைநீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, சுராசந்த்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை ஆணையர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த கும்பல், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தது.

இந்த சம்பவத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் பழங்குடியினர் அமைப்பினர் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளதால், சுராசந்த்பூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அரசு தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘அரசு ஊழியர்கள் அங்கீகரிக்கப்படாத முறையில் விடுப்பு எடுத்தால், அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

The post மணிப்பூர் போலீஸ் ஏட்டு இடைநீக்க விவகாரம்; அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல வேண்டாம்: பழங்குடியினர் அமைப்பினரின் அழைப்பால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,SURASANTPUR ,Surachandpur ,Manipur Police ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது