×

தமிழக பட்ஜெட்: மதுரையில் தொழில்வளர்ச்சி , வேலைவாய்ப்பு , உள்ளிட்ட அனைத்துக்கும் முகம் கொடுத்துள்ளது அரசு: முதலமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி..!!

சென்னை: தொழில்வளர்ச்சி , வேலைவாய்ப்பு , கல்வி , தமிழ் பண்பாடு , தொழிற்நுட்பம் , சுற்றுச்சூழல் என மதுரையின் அனைத்துக்கும் முகம் கொடுத்துள்ளது அரசு என முதலமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

1) மதுரையில் 26,500 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்க 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு

2) கோவை, மதுரையில் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

3) மதுரை மாவட்டத்திலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் சக்கிமங்கலம் தொழிற்பேட்டையில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று அடுக்குகள் கொண்ட அடுக்குமாடித் தொழில் வளாகம் 118 கோடியில் கட்டப்படும்.இதன் மூலம் 4500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

4) கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், கோவை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டம்.

5) மதுரையில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைத்திடும் வகையில் 11,368 கோடி ரூபாய் மதிப்பீடில் மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அதற்கான பணிகள் துவங்கும்.

6) தங்கி பணி பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதிகள் மதுரை, சென்னை, கோவை ஆகிய இடங்களில் நவீன வசதிகளுடன் கட்ட 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

7) சென்னை, கோவை, மதுரை சேலம், திருச்சியில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி அமைக்கப்படும்.

8) தமிழ்நாட்டில் பேசப்பட்டும் சௌராஷ்டிரா மற்றும் பழங்குடியின மொழிகளை இனவரைவியல் நோக்கில் ஆவணப்படுத்த 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

9) தமிழ்நாட்டிற்குள் கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் 8 இடங்களிலும், தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழ் சமூகம் வாழ்ந்த 4 இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ள 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

10) நவீன மரபணுவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு தமிழ் மக்களின் மரபணுத் தொன்மை, இடப்பெயர்வு, வேளாண்மை, பண்பாட்டு நடைமுறைகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களைக் கண்டறிய மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொல்மரபணுவியல் ஆய்வகம் மூலம் தொல்மரபியல் ஆராய்ச்சியை மேற்கொள்ள 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

11) வைகை, காவிரி, தாமிரபரணி மற்றும் நொய்யல் ஆகிய நதிகளை ஒட்டிய பகுதிகள் சீரமைக்கப்பட்டு நதிநீரை தூய்மையாகப் பராமரிக்கவும், நதிக்கரைகளில் பசுமைப் பூங்காங்கள் அமைக்கவும், திறந்தவெளி அரங்கம் அமைக்கவும் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆய்வு பணிகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

12) அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்க “நகர்ப்புற பசுமைத் திட்டம் ”

13) மதுரை மற்றும் சேலம் மாநகராட்சிகளில் 2024 2025 ஆம் நிதியாண்டில் 24 மணி நேர தடையற்ற குடிநீர் திட்டம்.

14) கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்.

15) சென்னை, மதுரை, கோவையில் ரயில்வே, வங்கி தேர்வுகளுக்கு உண்டு உறைவிட வசதிகளோடு 6 மாத பயிற்சி அளிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு.

16) விளையாட்டு போட்டிகளின் தலைமையகமாக தமிழ்நாட்டை மாற்றிட மதுரை, சென்னை, திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள்.

17) மதுரையில் புதிய கல்லூரி மாணவர் விடுதி

18) திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்த 26 கோடி ரூபாய்.

19) மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ஆவினில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட தானியங்கி இயந்திரங்களைப் பொருத்திட 60 கோடிரூபாய்.

20) கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கம் உள்ள வளாகத்தில் தமிழர்களின் பண்பாடு. தொன்மையான வரலாறு,கலைகளை அரங்கேற்றம் செய்யும் வகையில் 20 கோடி ரூபாயில் புதிய வளாகம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழக பட்ஜெட்: மதுரையில் தொழில்வளர்ச்சி , வேலைவாய்ப்பு , உள்ளிட்ட அனைத்துக்கும் முகம் கொடுத்துள்ளது அரசு: முதலமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி..!! appeared first on Dinakaran.

Tags : Madura ,Chief Minister ,Venkatesan M. B. ,Chennai ,Madurai ,Ch. Venkatesan M. B. ,Tamil ,Nadu ,CM Venkatesan M. B. ,
× RELATED வாலிபர் கொலையில் ஒருவர் கைது