×

நீலகிரியில் இயற்கையை ரசிக்க அழைக்கும் தாவர மரபியல் பூங்கா: கம்பியில் தொங்கியபடி சாகசப் பயணம் செய்ய பயணிகள் ஆர்வம்

நீலகிரி: கூடலூர் அருகே நாடுகாணியில் அமைந்திருக்கும் தாவர மரபியல் பூங்காவில் உள்ள அரியவகை தாவரங்கள், இயற்கை பள்ளத்தாக்குகள் கொண்ட காட்சி முனை உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை மிகவும் கவர கூடியவை பயணிகளை மேலும் கவரும் வகையில் அங்கு 2 குன்றுகளில் கோபுரங்கள் அமைத்து அவற்றின் இடையே 200 மீட்டர் உயரத்தில் பயணிக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

சிறப்பு பயிற்சி பெற்ற 15 பேர் பாதுகாப்பு உபகரணங்களுடன் சுற்றுலாப்பயணிகள் 550 மீட்டர் தூரத்திற்கு கம்பியில் தொங்கியபடி செல்ல உதவி செய்கின்றனர். நாடுகாணியில் கம்பியில் தொங்கியபடி சாகச பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கபடுகிறது. 200 மீட்டர் உயரத்திற்கு சாகச பயணம் செய்து மகிழும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்தபடி புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.

The post நீலகிரியில் இயற்கையை ரசிக்க அழைக்கும் தாவர மரபியல் பூங்கா: கம்பியில் தொங்கியபடி சாகசப் பயணம் செய்ய பயணிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Nadukani ,Kudalur ,Dinakaran ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...