×

பெண் கேட்டு கொடுக்காததால் காதலி வீட்டு முன்பு தீ குளித்த வாலிபர் பலி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை ஆற்றுப்புறம் பகுதியில் நேற்று மாலை சுமார் 5.30 மணி அளவில் வாலிபர் ஒருவர் 5 லிட்டர் பெட்ரோல் கேனுடன் பைக்கில் வந்து இறங்கினார். சிறிது நேரமாக அங்கும் இங்குமாக நடந்தவர் திடீரென தான் கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து கொண்டார். மளமளவென தீ எரிய தொடங்கியதும் வாலிபரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மின் மோட்டார் மூலம் வாலிபர் உடலில் தண்ணீரை பீச்சியடித்தது தீயை அணைத்தனர். அதற்குள் தலை முதல் கால் வரை கருகிய நிலையில் வாலிபர் கீழே சாய்ந்தார்.

இந்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்கா நடந்த போலீஸ் விசாரணையில், தீ குளித்த வாலிபர் புதுக்கடை அருகே சிறிய வண்ணான்விளையை சேர்ந்த மோகன் என்பவரது மகன் முகேஷ் (25) என்பது தெரிய வந்தது. மேலும் அவர், தீகுளித்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்து உள்ளார். தற்போது அந்த பெண், வாலிபரை விட்டு விலகி சென்று உள்ளார். இதையடுத்து நேற்று மாலை 3 மணி அளவில் வாலிபர் குடும்பத்துடன் வந்து பெண் கேட்டுள்ளார். பெண் வீட்டார் தற்போது திருமணத்திற்கு தயாராக இல்லை என்று கூறி உள்ளனர். இதனால் குடும்பத்தினருடன் வீட்டிற்கு சென்று இருக்கிறார். பின்னர் காதலி வீட்டு முன்பு பைக்கில் வந்துள்ளார். அப்போது திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி விட்டு காதலியை அழைத்தாராம்.

காதலி வராததால் மனம் உடைந்தவர் உடலில் தீ வைத்து கொண்டார் என்பதும் தெரிய வந்தது. இதற்கிடையே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த முகேஷ் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜாதக பொருத்தம் பார்த்த ஜோடி
இளம்பெண்ணும் வாலிபரும் சில வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்யும் நோக்கில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் நாங்குநேரிக்கு சென்று ஜாதகம் பார்த்து உள்ளனர். அதன் பிறகு வீட்டில் வந்து பெண் கேள் என்று காதலி கூறி உள்ளார். அதன்படியே முகேஷ் காதலி வீட்டுக்கு சென்று பெண்கேட்டு உள்ளார்.

The post பெண் கேட்டு கொடுக்காததால் காதலி வீட்டு முன்பு தீ குளித்த வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : NAGARGO ,NITHIRAVILA ,KANYAKUMARI DISTRICT ,
× RELATED கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல்