×

மாங்காய் இஞ்சி – கொண்டைக்கடலை பச்சடி

தேவையானவை:

துவரம் பருப்பு – அரை கப்,
குடமிளகாய் (சிறியது) – 1,
கொண்டைக் கடலை (ஊற வைத்தது) – கால் கப்,
மாங்காய் இஞ்சி – 2 துண்டு,
சின்ன வெங்காயம் – 10,
பச்சை மிளகாய் – 5,
உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

துவரம் பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து மலர வேக வையுங்கள்.கொண்டைக் கடலையை உப்பு சேர்த்து வேக வையுங்கள். மாங்காய் இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்குங்கள். குடமிளகாயை பொடியாக நறுக்குங்கள். சின்ன வெங்காயத்தை யும் தோலுரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பச்சை மிளகாய் ஒரு அங்குல நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், மாங்காய் இஞ்சி, குடமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, 1 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிய புளித் தண்ணீரை சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதித்த பின் பருப்பு, கொண்டைக் கடலை, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். செட்டி நாட்டு திருமண விருந்தில் இந்தப் பச்சடி மிகவும் பிரபலம்.

The post மாங்காய் இஞ்சி – கொண்டைக்கடலை பச்சடி appeared first on Dinakaran.

Tags :
× RELATED நுங்கு ஜூஸ்