×

பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான ஓஷன் லைஃப் ஸ்பேஷஸ் நிறுவனத்தை எஸ்.கே பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகிய இரண்டு பேர் இணைந்து நடத்தி வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில் நிறுவனத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை எஸ்.கே பீட்டர் தர மறுத்ததாக கூறி ஸ்ரீராம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் எஸ்.கே பீட்டர் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ரத்தும் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு பண பரிமாற்றம் நடந்ததாக கூறி புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருக்கிறதா என அமலாக்கத்துறை அதிகாரிகள் எஸ்.கே பீட்டரின் நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறையினர் வழக்குபதிவு செய்து உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகும்படி பீட்டருக்கு சம்மன் அனுப்பியது.

இதை எதிர்த்து பீட்டர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் இடையிலான தொழில் பிரச்சனையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்தது தவறு என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தன் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் சட்ட விரோத பண பரிமாற்றம் செய்தது செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் சுந்தரம் மோகன் அடங்கிய அமர்வு அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்து. மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

The post பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Chennai High Court ,Ocean Life Spaces ,SK Peter ,Sriram ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...