×

ஓடும் காரில் திடீர் தீ; 5 பேர் உயிர் தப்பினர்

திருப்பூர்: கோவை பெரியார் நகரை சேர்ந்தவர் கமலேஷ் (20). இவர் தனது குடும்பத்தினர் 4 பேருடன் காரில் கோவையில் இருந்து சேலம் நோக்கி நேற்று பிற்பகல் சென்று கொண்டிருந்தார். கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, பள்ளகவுண்டம்பாளையத்தை கடந்து சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்த நிலையில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதை கவனித்த கமலேஷ் காரை உடனடியாக சாலையோரம் நிறுத்தி குடும்பத்தினர் 4 பேரையும் வெளியேற்றினார். இதுகுறித்து அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கமலேஷ் விரைந்து செயல்பட்டு 4 பேரையும் காரிலிருந்து வெளியேற்றியதால் அவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

The post ஓடும் காரில் திடீர் தீ; 5 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Kamlesh ,Periyar, Coimbatore ,Coimbatore ,Salem ,Coimbatore-Salem National Highway ,Tirupur District Oothukuli ,Pallagaundampalayam ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்