×

“அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நிதி நிலை அறிக்கை”.. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு காங்கிரஸ் வரவேற்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு அளித்துள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
குடிசையில்லா தமிழகம் திட்டத்தையும், காலை சிற்றுண்டி திட்டம், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ. 1,000 வழங்குவதையும் வரவேற்கிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தும் என்றும் கூறினார்.

தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு கொமதேக வரவேற்பு
“கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறேன் என்று சட்டப்பேரவை வளாகத்தில் கொமதேக எம்எல்ஏ ஈஸ்வரன் பேட்டியளித்தார். அப்போது பேசியவர்; அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நிதி நிலை அறிக்கை. அரசு பள்ளிகளில் படித்த உயர்கல்விக்கு செல்லும் ஆண் பிள்ளைகளுக்கும் ரூ.1,000 வழங்குவதை வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு வாழ்வுரிமைக் கட்சி வரவேற்பு
“தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, மிகப்பெரிய நிதிச்சுமையின் காரணமாக, ஓரளவுக்கு நிதி மேலாண்மையை கையாண்டுள்ளது என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி எம்எல்ஏ வேல்முருகன் பேட்டியளித்தார். அப்போது பேசியவர்; சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தாமல், ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பது வருத்தமளிக்கிறது” என்று அவர் கூறினார்.

தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு
நெய்தல் மீட்பு இயக்கத்தில் நீலக்கொடி காயல்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை ஊர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்பது வரவேற்க தக்க திட்டம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஜவாஹிருல்லா பேட்டியளித்தார். அப்போது பேசியவர்; 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதன் முதற்கட்டமாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் இந்த நிதியாண்டில் கலைஞரின் கனவு திட்டம் என்ற பெயரில் அமல்படுத்தப்படும் என்பதை வரவேற்கின்றோம். ரூ.5,000 கோடி செலவில் நீர்நிலைகளை புரமைக்கப்படும் என்ற திட்டத்தையும் வரவேற்கிறோம் என்று அவர் கூறினார்.

The post “அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நிதி நிலை அறிக்கை”.. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislature ,Chennai ,Congress ,Tamil Nadu ,Congress Party ,INDIAN COMMUNIST ,TAMIL ,NADU ,Dinakaran ,
× RELATED விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்...