- ஜல்லிக்கட்டு
- சனார்பட்டி
- திண்டுக்கல்
- செயின்ட் அந்தோணி தாவர
- சனார்பட்டி
- திண்டுக்கல் மாவட்டம்
- திருவண்ணாமலை
- கிருஷ்ணகிரி
- வேலூர்
- திருச்சி
- மதுரை
- ஜல்லிக்கல்
- ஜல்லிக்கலி
- ஜல்லிகாட்டு:
- கோயில் திருவிழா
- புகையிலை பார்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே புனித அந்தோணியார் ஆலைய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. புகையிலை பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 650 காளைகள் பங்கேற்றன. வாடிவாசல் திறந்ததும் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முற்பட்டனர்.
பிடிகொடுக்காமல் சில காளைகள் நீண்ட நேரம் நின்று விளையாடின. வீர விளையாட்டை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே திருவள்ளுவர் நகர் பகுதியில் எருது விடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டி தொடங்கியதும் 100 மீட்டர் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் காளைகள் துள்ளி குதித்து ஓடின.
இதில் செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளானோர் பங்கேற்று எருது விடும் விழாவை கண்டு ரசித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செட்டிக்காடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை என பல்வேறு இடங்களிலிருந்து 13 காளைகள் பங்கேற்றன. 117 மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர் ஒரு காளைக்கு 9 வீரர்கள் என 20 நிமிடங்கள் போட்டி நடைபெற்றது.
கலைகளை அடக்கிய வீரர்களுக்கும் அடங்காத காளை மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தாராபுரம் அருகே நாகேஸ்வர சாமிகோவில் விழாவை முன்னிட்டு ரேக்ளா போட்டி நடைபெற்றது. 48 ஊர் கிராமமக்கள் சார்பில் நடைபெற்ற இந்த ரேக்ளா பந்தயத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு என 500க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. மொத்தம் 400 மாட்டு வண்டிகள் பங்கேற்ற நிலையில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஊர் மக்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. ரேக்ளா பந்தயத்தை சாலையின் இரு புறமும் திரண்டு ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
The post சாணார்பட்டி அருகே புகையிலைப் பட்டியில் ஜல்லிக்கட்டு: கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த வீர விளையாட்டு appeared first on Dinakaran.