×

அம்மாபேட்டை புத்தூர் பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர்: அம்மாபேட்டை புத்தூர் வருவாய் கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்கள் குறித்து மாவட்ட நிர்வாகமும், வேளாண்மை துறையும் கணக்கெடுத்து ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளதாவது: ஆற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் தண்ணீர் தொடர்ச்சியாக வராத காரணத்தால் கருது வரும் தர வாயில் இருந்த நெற்கதிர்கள் பட்டுப்போய் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாதிரியான இடங்களை உடனடியாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும் வேளாண் துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.

 

The post அம்மாபேட்டை புத்தூர் பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puttur ,Ammapet ,Thanjavur ,Tamil Nadu Farmers Association ,
× RELATED அம்மாபேட்டை அருகே ஆட்டை கடித்துக் கொன்ற மர்ம விலங்கு