×

நாகப்பட்டினம் எஸ்பி தகவல் ஜீவனாம்சம் தராமல் மனைவிக்கு மிரட்டல் கோர்ட் உத்தரவுபடி கணவன் உள்பட 4 பேர் மீது வழக்கு

கீழ்வேளூர் கீழ்வேளூர் அருகே மனைவிக்கு ஜீவனாம்சம் தராமல் மிரட்டல் விடுத்த கணவன் உட்பட நான்கு பேர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜகபர் நாச்சியார். இவருக்கும் கீழ்வேளூர் இரட்டைமதகடி பகுதியை சேர்ந்த அப்துல் கரீம் என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு விவாகரத்து கேட்டு இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலையில், வழக்கை விசாரித்த நாகை குற்றவியல் நீதிமன்றம். ஜகபர் நாச்சியாவிற்கு அப்துல் கரீம் மாத வாடகையாக ரூ.3 ஆயிரம், ஜீவனாம்சமாக 7000 என பத்தாயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

The post நாகப்பட்டினம் எஸ்பி தகவல் ஜீவனாம்சம் தராமல் மனைவிக்கு மிரட்டல் கோர்ட் உத்தரவுபடி கணவன் உள்பட 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam SP ,Killyvellur ,Jakabar Nachiar ,Gandhinagar ,Kilvellur ,Nagai ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்