×

க.பரமத்தி வட்டார கல்வி அலுவலக கட்டிடத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவில் குடிமகன்களின் கூடாரமாக மாறியது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

க.பரமத்தி: க.பரமத்தி வட்டார கல்வி அலுவலக கட்டிடம் திறந்து 10ஆண்டுகளாகியும் சுற்றுச்சுவர் வசதியினை ஏற்படுத்த நடவடிக்கை இல்லாததால் இரவில் குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ளது இனியாவது சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியத்தில் 30ஊராட்சிகள் உள்ளன. இதில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் என 106 பள்ளிகள் செயல்பாடுகள் இதற்காக க.பரமத்தி வட்டார கல்வி அலுவலம் க.பரமத்தி -நெடுங்கூர் சாலையில் தாமரை நகரில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, கடந்த 2013ஆண்டு 26ந்தேதி அப்போதைய போக்குவரத்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு தற்போது 10ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த வட்டார கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலர் ,கூடுதல் வட்டார கல்வி அலுவலர் உள்பட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் கட்டுப்பாட்டின் கீழ் 86 தொடக்கப்பள்ளிகளும், 20 நடுநிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வந்தன. தற்போது ஒரிரு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிகிறது.இப்பள்ளிகளில் ஆண், பெண் ஆசிரியர்கள் என 250க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

The post க.பரமத்தி வட்டார கல்வி அலுவலக கட்டிடத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவில் குடிமகன்களின் கூடாரமாக மாறியது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Paramathi Regional Education Office ,K. Paramathi ,K. ,PARAMATI REGIONAL EDUCATION OFFICE ,K. Paramati Union ,K. Paramathi Vattara Education Office ,Dinakaran ,
× RELATED நிலத்தடி நீர் ஆதாரம் வற்றிப் போனதால் அழிக்கப்பட்டு வரும் தென்னை மரங்கள்