×

குளித்தலை கிராமப்புற மாலை நேரக்கல்வி மாணவர்கள் திருச்சிக்கு கல்வி சுற்றுலா

குளித்தலை:கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விதைகள் அறக்கட்டளை மூலமாக வயலூர், தேவசிங்கம்பட்டி, மேட்டுப்பட்டி வேங்காம்பட்டி மற்றும் தாளியாம்பட்டி ஆகிய கிராமத்தில் 7 மாலை நேர வகுப்பு மையங்கள் இந்த கல்வியாண்டில் தனியார் நிறுவன நிதி உதவியுடன் நடைபெற்று வருகிறது. தற்சமயம் மாணவர்களின் கல்வி சுற்றுலாவாக திருச்சி ரயில்வே அருங்காட்சியகம் மற்றும் முக்கொம்பூ சுற்றுலா பகுதிகளுக்கு வாகனம் மூலம் மாணவர்களை அழைத்து சென்றனர். இந்த பயணத்தால் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது என பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் விதைகள் அறக்கட்டளை நிறுவனர் சந்துரு, இயக்குனர் ஜெயந்தி, அறக்கட்டளையின் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் மற்றும் மைய ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post குளித்தலை கிராமப்புற மாலை நேரக்கல்வி மாணவர்கள் திருச்சிக்கு கல்வி சுற்றுலா appeared first on Dinakaran.

Tags : Trichy ,Kuluthlai ,Kulithlai ,Vayalur ,Devasinghampatti ,Mettupatti Vengambatti ,Thaliyampatti ,Seeds Foundation ,Karur ,Kulithalai ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...