×
Saravana Stores

பட்டாசு தொழிலாளியை கத்தியால் குத்திய பெண் கைது

 

சிவகாசி, பிப்.19: சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துசிகாமணி மகன் கருப்பசாமி (39). இவர் டூவீலரில் சிவகாசியில் இருந்து திருத்தங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். சிவகாசி பழைய ஒலிம்பிக் தியேட்டர் அருகில் பழக்கடையில் நின்று கொண்டிருந்த விஸ்வநத்தம் காகாகாலனியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி சுப்புலட்சுமி(38) என்பவரை இடிப்பது போல் டூவீலரை உரசி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் சுப்புலட்சுமிக்கும் கருப்பசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுப்புலட்சுமி பழக்கடையில் இருந்த கத்தியை எடுத்து கருப்பசாமியை குத்தியுள்ளார். இதில் வயிற்றில் படுகாயம் அடைந்த நிலையில் கருப்பசாமி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்புலட்சுமியை கைது செய்தனர்.

The post பட்டாசு தொழிலாளியை கத்தியால் குத்திய பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Muthusikamani ,Karuppasamy ,Alamarathupatti North Street ,Thiruthangal ,Viswanantham ,Olympic theater ,
× RELATED சிவகாசியில் உள்ள லாரி பார்சல் சர்வீஸ்...