×

டாஸ்மாக் பாரில் தகராறு செய்த சகோதரர்கள் கைது

 

வேடசந்தூர், பிப். 19: வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நால்ரோடு அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே சல்லைய கவுண்டனூரை சேர்ந்த ராஜா (60) என்பவர் பார் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இந்த பாரில் சேடபட்டியை சேர்ந்த ஹவுஸ்பாண்டி (27), அவரது தம்பி அருண்பாண்டி (25) ஆகிய இருவரும் மது அருந்தினர். போதை தலைக்கேறிய நிலையில் பார் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த பார் உரிமையாளர் ராஜா அவர்களை தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ஹவுஸ் பாண்டி மது பாட்டிலால் ராஜாவை குத்த முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹவுஸ்பாண்டி, அருண்பாண்டி இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதையடுத்து பார் தகராறு தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post டாஸ்மாக் பாரில் தகராறு செய்த சகோதரர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Vedasandur ,Saliyur Nal Road ,Raja ,Challaya Kauntanur ,Dinakaran ,
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது