×

மின்வாரிய அலுவலகத்தில் கணினி பல மாதமாக முடக்கம்

திருப்புவனம், பிப்.19: திருப்புவனம் மின்வாரிய அலுவலகம் மேற்கு பிரிவில் கடந்த பல மாதங்களாக கணினி இயங்காமல் முடங்கி கிடக்கின்றன. பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்தால் சர்வர் பழுது இண்டெர்நெட் இணைப்பு கிடைக்க வில்லை. கிழக்கு பிரிவு அலுவலகத்திலோ அல்லது தனியார் பிரவுசிங் செண்டரிலோ மின் கட்டணத்தை செலுத்துங்கள் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். திருப்புவனம்,திருப்பாச்சேத்தி, கீழடி, பூவந்தி பகுதிகள் உட்பட சுமார் 51ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன.

இதில் விவசாய பம்ப்செட் மின் இணைப்புகள் 3 ஆயிரத்து 945 உள்ளன. பொதுமக்கள் மின் கட்டணம் உட்பட பல்வேறு பணிகளுக்கு திருப்புவனம் மின்வாரிய அலுவலகம் தான் வரவேண்டியுள்ளது. தனியார் பிரவுசிங் செண்டரில் மின் கட்டணம் செலுத்தினால் சர்வீஸ் கட்டணம் குறைந்த பட்சம் ரூ.10 செலுத்த வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் நேரடியாக மின்வாரிய அலுவலகத்தில் கட்டணத்தை செலுத்த வருகிறார்கள். மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நுகர்வோருக்கு இரண்டு மாத மின் கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை சொல்ல முடியவில்லை. வீட்டுக்கு வீடு ரீடிங் எடுத்து வரும் யூனிட் விவரங்களை கம்ப்யூட்டரில் அப்லோடு செய்யவது மில்லை. இதனால் விவரம் கேட்டு வரும் மின் நுகர்வோர் பெரும் சிரமப்படுகின்றனர். உடனடியாக மின்வாரிய நிர்வாகம் கணினி சர்வர் மற்றும் இண்டெர்நெட் இணைப்பு சரிவர இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மின்வாரிய அலுவலகத்தில் கணினி பல மாதமாக முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruppuvanam ,Tiruppuvanam Power Board ,West Division ,Dinakaran ,
× RELATED தாய் பாசத்திற்கு ஈடு இணை ஏது?...