×

கல்லூரி மாணவர்களின் பறவைகள் கணக்கெடுப்பு

 

மதுரை, பிப். 19: அமெரிக்கன் கல்லூரியில் நடந்த, வளாக பறவைகள் கணக்கெடுப்பில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நாடு முழுவதும், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், கார்ப்பரேட் நிறுவன வளாகங்கள் உள்ளிட்டவற்றில் வசிக்கும் பறவைகளின் விவரங்களை கண்டறிய, இந்திய பறவைகள் கணக்கெடுப்பு மையம் சார்பில், ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வளாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம்.

2013ம் ஆண்டு துவங்கி இந்தியா முழுவதும் நடந்து வரும் இந்நிகழ்வு, நடப்பாண்டு கடந்த 16ம் தேதி துவங்கியது. இதன்படி, மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள், தங்கள் வாளகத்தில் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
கல்லூரியின் பசுமை மேலாண்மை திட்ட தலைவர் ராஜேஷ் தலைமையில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது புள்ளி ஆந்தை, வல்லூறு, வெண்மார்பு நீர்க்கோழி, மரங்கொத்தி, பூக்கொத்தி, கிளி, ஆந்தை உட்பட 20க்கும் மேற்பட்ட பறவை சிற்றினங்கள் அங்கு வசிப்பது கண்டறியப்பட்டு ‘இ-பேர்டு’ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. கடந்தாண்டு நடந்த இக்கணக்கெடுப்பில், நாடு முழுவதும் 4,259க்கும் மேற்பட்ட பறவை ஆர்வலர்கள் கலந்து கொண்டு, 1,072 பறவை இனங்களை பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது.

The post கல்லூரி மாணவர்களின் பறவைகள் கணக்கெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai, Pip ,American College ,
× RELATED அமெரிக்கன் கல்லூரியில் 2 நாள் சர்வதேச மாநாடு