×

தூத்துக்குடியில் துணிகரம் மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

ஸ்பிக்நகர்,: தூத்துக்குடியில் மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களாக ரோந்து பணிக்கே வராத போலீசால் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தூத்துக்குடி, முத்தையாபுரம், கீதாநகர், கீதா பள்ளிரோட்டைச் சேர்ந்தவர் பொன்சேகர் (45). இவர் முத்தையாபுரத்தில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு வழக்கம் ேபால் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடை கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பெட்டியில் இருந்த பணம் மற்றும் பலசரக்கு பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து எஸ்ஐ சுந்தரம் வழக்குப் பதிவுசெய்த நிலையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த போது, நம்பர் பிளேட் இல்லாத காரில் கொள்ளையர்கள் வந்தது தெரியவந்தது. மேலும் இரவு ரோந்து வரும் போலீசார் பொன்சேகர் கடையில் வைத்துள்ள டயரியில் தங்கள் வருகையை பதிவு செய்வது வழக்கம். கடந்த 10 நாட்களாக முத்தையாபுரத்திற்கு போலீசார் ரோந்து வரவில்லை என்பது அந்த டயரியிலிருந்து தெரியவந்தது. தகவலறிந்து வியாபாரிகள் பலர் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து, போலீசார் முறையாக ரோந்துப்பணியை மேற்கொண்டிருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது என்றும் எனவே மீண்டும் இரவு ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

The post தூத்துக்குடியில் துணிகரம் மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Thieves ,Thoothukudi ,Spignagar ,Ponsekar ,Geetha Palliroad ,Geetha Nagar ,Muttiahpuram, Thoothukudi ,Muthiyapuram ,Vadhakaram ,
× RELATED தூத்துக்குடியில் `டிசி’ வாங்க சென்ற மாணவர் விபத்தில் பரிதாப பலி