×

நெடுஞ்சாலைத் துறை டிரைவர்கள் சங்க கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அனைத்து ஓட்டுனர்கள் தலைமைச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு செயல் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். முனியப்பன், மாது முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் பொங்கியண்ணன், பொதுச்செயலாளர் குமார், மாநில பொருளாளர் முருகேசன், கொள்கை பரப்பு செயலாளர் விநாயகம், மாநில துணைத் தலைவர் செல்வம், மாநில துணை செயலாளர் அப்துல் நிஜாம், செயல் தலைவர் சிவக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சேலம் வட்டத்தில் பணிபுரியும் நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த சேலம், எடப்பாடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்லைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வில், சேலம் மண்டல தலைவராக ராஜாமாணிக்கம், செயலாளராக பிரேம்குமார், துணைத் தலைவராக செந்தில்குமார், துணை செயலாளராக மோகன்ராஜ், பொருளாளராக முனியப்பன், நிர்வாகக்குழு உறுப்பினராக ரஜினிகாந்த் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

The post நெடுஞ்சாலைத் துறை டிரைவர்கள் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Highway Department Drivers Association ,Krishnagiri ,Tamil Nadu Highway Department All Drivers Head Association ,Executive Chairman ,Kannan ,Muniyappan ,Mathu ,State President ,Pongiannan ,General Secretary ,Kumar ,State Treasurer ,Murugesan ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்