×

வறட்சியின் பிடியில் சிக்கிய நாகாவதி அணை

தர்மபுரி: நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த்ததால், போதிய நீர்வரத்தின்றி வறட்சியின் பிடியில் சிக்கிய நாகாவதி அணை, குட்டை போல் காணப்படுகிறது. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நாகாவதி அணை உள்ளது. 1987ம் ஆண்டு ₹3.13 கோடி மதிப்பீட்டில் இந்த அணை கட்டப்பட்டது. அணையின் இடது மற்றும் வலது புறகால்வாய்கள் மூலம் அரக்காசனஹள்ளியில் 417.77 ஹெக்டேர், சின்னம்பள்ளி பகுதியில் 722.61 ஹெக்டர், பெரும்பாலை பகுதியில் 852.62 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. ஆக மொத்தம் 1993 ஏக்கர் ஹெக்டேர் பயனடைந்து வருகிறது. கடந்த 2021-2022ம் ஆண்டுகளில் போதிய மழை பெய்ததால், அணைக்கான நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது. விவசாய பணிகளும் மும்முரமாக நடந்தது. ஆனால், கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென சரிந்தது. இதனால், விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

The post வறட்சியின் பிடியில் சிக்கிய நாகாவதி அணை appeared first on Dinakaran.

Tags : Nagavati dam ,Dharmapuri ,Nallampally ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி