×

நாங்க ரிசர்வ் பண்ணிட்டோம்… அரசு சுவருக்கு அரசியல் கட்சியினர் போட்டி

 

கோவை, பிப்.19: கோவை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசு மற்றும் அரசு சார்பு துறைகளின் இடங்களை போட்டி போட்டு பிடித்து விளம்பரம் செய்ய அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக நெடுஞ்சாலை ரோடு, பாலம், அரசு கட்டடங்கள் போன்றவற்றில் கட்சியினர் தங்களது சின்னங்களையும், தேர்தல் தொடர்பான வாசகங்களையும் குறிப்பிட்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி எந்த நேரத்திலும் அரசு சுவர்களில் எழுவது, விளம்பரம் செய்வது கூடாது.

அப்படி மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம், போலீசார் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடையை மீறி பல இடங்களில் கட்சியினர் சுவர் விளம்பரங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் தங்களது கட்சி பெயர், சின்னம் குறிப்பிட்டு ரிசர்வ் செய்து விட்டதாக எழுதியும் வைத்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் பிரிவினரிடம் கேட்ட போது, ‘‘ இன்னும் நடத்ைத விதிகள் அமலாக்கப்படவில்லை.

தேர்தல் தேதி அறிவித்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் சுவர் விளம்பரம் செய்தவர்களை அதை தங்களது சொந்த செலவில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு பதிவாகி விடும். இப்போதுள்ள சூழலில், போலீசார் தான் அரசு சுவர்களில் அத்துமீறி எழுதுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் சிலர் இப்போதே தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கான நோட்டீஸ், பேனர் போன்றவை அச்சடிக்கப்பட்டு வருகிறது. இந்த விவரங்கள் எதுவும் தேர்தல் நடத்தை விதிகளில் இப்போது வராது’’ என்றனர்.

The post நாங்க ரிசர்வ் பண்ணிட்டோம்… அரசு சுவருக்கு அரசியல் கட்சியினர் போட்டி appeared first on Dinakaran.

Tags : KOWAI ,KOWAI DISTRICT ,
× RELATED வால்பாறை அருகே காட்டு மாடு முட்டி தேயிலை தோட்ட தொழிலாளி பலி..!!