×

காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழப்பு

ரஃபா: காசாவின் அருகே எகிப்து எல்லையில் ரஃபா உள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதையடுத்து பாலஸ்தீனத்தின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் ரஃபாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். ரஃபாவில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள்,குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர் என காசாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.இஸ்ரேல் ஹமாஸ் போரில் மனிதாபிமான போர் நிறுத்தம் செய்ய கோரி ஐநாவில் அல்ஜீரியா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடக்கிறது.

The post காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Gaza ,Rafah ,Palestine ,Prime Minister of Israel ,Hamas ,Dinakaran ,
× RELATED ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு மழை: 9 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி