×

சிக்சர் மழையில் சாதனை

* ராஜ்கோட் டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் மொத்தம் 28 சிக்சர்களை விளாசினர். டெஸ்ட் வரலாற்றில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட மிக அதிகமான சிக்சர்களாக இது அமைந்தது. முன்னதாக, 2019ல் விசாகப்பட்டனத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்டில் 27 சிக்சர் விளாசி உலக சாதனை படைத்திருந்த இந்தியா ராஜ்கோட்டில் அதை முறியடித்து அசத்தியது.

* நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 48 சிக்சர்களை விளாசியுள்ளதும் புதிய உலக சாதனையாகும். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2019ல் நடந்த தொடரில் இந்தியா 47 சிக்சர் அடித்திருந்தது.

* இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால் அந்த இன்னிங்சில் ஒரு டஜன் சிக்சர்களை விளாசி பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் உலக சாதனையை (12 சிக்சர்) சமன் செய்தார்.

* டெஸ்ட் போட்டிகளில் முதல் 3 சதங்களையும் 150+ ஸ்கோராக மாற்றிய முதல் இந்திய வீரர் மற்றும் உலக அளவில் 7வது வீரர் என்ற பெருமை ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்துள்ளது.

* வினோத் காம்ப்ளி (21 வயது, 54 நாள்), டான் பிராட்மேன் (21 வயது, 318 நாள்) ஆகியோரைத் தொடர்ந்து டெஸ்டில் மிக இளம் வயதில் 2 இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் (22 வயது, 49 நாள்) படைத்துள்ளார்.

* தாயாரின் உடல்நிலை காரணமாக சென்னை வந்திருந்த அஷ்வின் நேற்று மீண்டும் ராஜ்கோட் திரும்பியதுடன், தேநீர் இடைவேளைக்குப் பிறகு களமிறங்கி ஹார்ட்லியை கிளீன் போல்டாக்கினார்.

* சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 9வது முறையாக ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜடேஜா, முதல் இடத்தில் இருந்த அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்தார். ஒட்டுமொத்தமாக அதிக ஆட்ட நாயகன் விருது பெற்ற இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் சச்சின் (14), டிராவிட் (11) ஆகியோருக்கு அடுத்து 3வது இடத்தில் உள்ளார்.

* 2009 வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்துக்கு 617 ரன் இலக்கை நிர்ணயித்திருந்த இந்தியா, நேற்று 2வது அதிகபட்சமாக 557 ரன் இலக்கை நிர்ணயித்தது.

* ராஜ்கோட் டெஸ்டின் 2வது இன்னிங்சில் 122 ரன்னுக்கு சுருண்டது, ‘பேஸ்பால்’ அதிரடி வியூகத்தை அறிமுகம் செய்த கேப்டன் ஸ்டோக்ஸ் – பயிற்சியாளர் மெக்கல்லம் கூட்டணியின் கீழ் இங்கிலாந்து பதிவு செய்த மிகக் குறைந்த ஸ்கோராக அமைந்தது.

The post சிக்சர் மழையில் சாதனை appeared first on Dinakaran.

Tags : Rajkot Test ,South Africa ,Visakhapatnam ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...