×
Saravana Stores

திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது

சென்னை: சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமையில் நடந்தது. மாநில துணைத் தலைவர், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், இணைச் செயலாளர்கள் வி.பி.ராஜன், திப்பம்பட்டி ஆறுசாமி, மருதூர் ராமலிங்கம், துணைச் செயலாளர்கள் மு.பொன்தோஸ், மாரியப்பன் கென்னடி, பி.துரைசாமி, சி.தசரதன், பாரமானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மார்ச் 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, நாடாளுமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 27ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்தை சிறப்பாக நடத்திட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

The post திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : DMK ,Adi Dravidar Welfare Committee State Executives ,A. Krishnasamy ,MLA ,Chennai ,DMK Adi Dravidar Welfare Committee State Executives ,Anna University, Chennai ,State Secretary ,State Vice President ,Forest Minister ,M. Mathiventhan ,Joint Secretaries ,V. P. Rajan ,Thippambatti Aarusamy ,Marudhur Ramalingam ,Adi Dravidar Welfare ,Committee ,State Executives ,Dinakaran ,
× RELATED திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி,...