×

விவசாயிகளின் போராட்ட பின்னணியில் சீனா: சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பகீர்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்ட பின்னணியில் சீனா இருப்பதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் ெதாடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு எழுதியுள்ள கட்டுரையில், ‘விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் சீனா உள்ளது.

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வராமல் தடுப்பதே விவசாயிகள் போராட்டத்தின் நோக்கமாகும். அமெரிக்காவுக்கு ஆதரவான கட்சியாக பாஜகவை சீனா பார்க்கிறது. விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தும் அமைப்புகளுக்கு பின்னால் சீனா இருப்பதாகக் கருதுகிறேன். இதற்கான ஆதாரம் என்ன? என்று கேட்டால், அதற்கு என்னிடம் ஏதுமில்லை. ஆனால் தர்க்கரீதியான அனுமானங்களின் அடிப்படையில் சூழ்நிலை ஆதாரங்கள் உள்ளன.

வரும் மக்களவை தேர்தலில் அமெரிக்காவின் ஆதரவு கட்சியான பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அது சீனாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். இந்திய மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் விவசாயிகளாகவும், விவசாய ெதாழில் சார்ந்தவர்களாகவும் உள்ளனர். அதனால் அவர்களை அணிதிரட்டி போராட வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post விவசாயிகளின் போராட்ட பின்னணியில் சீனா: சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பகீர் appeared first on Dinakaran.

Tags : China ,Supreme Court ,Bagheer ,New Delhi ,Former ,Markandeya Katju ,Delhi ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...