×

மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சிங்காரவேலர் 165-ஆவது பிறந்தநாள் இன்று!

சென்னை: தமிழ்ப் பற்றும் பொதுவுடைமைக் கொள்கையும் கொண்டு உழைக்கும் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 165-ஆவது பிறந்தநாள் இன்று. ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்று தமிழ் மண்ணில் விளைந்த புரட்சியாளரான அவரது நினைவுகளைப் போற்றி, அவர் விரும்பிய சுயமரியாதையும் சமதர்மமும் தழைத்தோங்கும் சமூகம் வளர பாடுபடுவோம்!

ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சிறுபான்மை நல ஆணையக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வரும் நாம், முதன்முதலாக சிறுபான்மைச் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கும் வகையில் நேற்றைய கூட்டத்தை நடத்தியதுடன் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் 10 அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறோம்.

குறிப்பாக, சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தியதை எதிர்த்துக் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். எனினும் சிறுபான்மையினர் மீதான ஒன்றிய அரசின் பாராமுகத்தையடுத்து, அவர்கள் நிறுத்திய கல்வி உதவித்தொகையை நாமே வழங்க முடிவெடுத்துள்ளேன்.

ஒன்றிய பா.ஜ.க நிறுத்திய உதவித்தொகை இனித் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்படும். சிறுபான்மையினரின் சமூக – கல்வி- பொருளாதார வளர்ச்சிக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கும் என்றும் துணைநிற்பது கழக அரசுதான் என இதன் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

The post மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சிங்காரவேலர் 165-ஆவது பிறந்தநாள் இன்று! appeared first on Dinakaran.

Tags : Singaraveler ,Chennai ,Singaraveller ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...