×

குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 204 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1374 புதிய வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.204.57 கோடி செலவில் 1374 புதிய வகுப்பறை கட்டடங்கள், ரூ.80.85 கோடி செலவில் 270 துறைக் கட்டடங்கள் -‘பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.48.56 கோடி செலவில் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் ரூ.3.92 கோடி செலவில் நூலகக் கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து போதமலையில் அமைந்துள்ள கீழூர் ஊராட்சியில் ரூ.139.65 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 17.2.2024 அன்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 204 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1374 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 80 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 270 கட்டடங்களை திறந்து வைத்து, நாமக்கல் மாவட்டம், போதமலையில் அமைந்துள்ள கீழூர் ஊராட்சியில் 139 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.48.56 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள் மற்றும் ரூ.3.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடங்களையும் திறந்து வைத்தார். குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ரூ.204.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6000 புதிய வகுப்பறைகளும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1200 வகுப்பறைகளும், என மொத்தம் 1050 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7200 வகுப்பறைகள் கூடுதலாகக் கட்டப்படும் என அறிவித்ததன் அடிப்படையில் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 5,653 புதிய வகுப்பறைகள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இக்கட்டடங்கள் அனைத்தும் குழந்தை நேய சிறப்பு அமைப்புகளான உயர்த்தப்பட்ட மேற்கூரை, விசாலமான தாழ்வாரம். காற்றோட்டமிக்க ஜன்னல் வசதிகள், வழுக்காத தரைகள். கற்றலை ஊக்குவிக்கும் சுவர் ஓவியங்கள், வாழ்க்கைப் பாடங்கள் அடங்கியனவாகும்.

இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட 1000 வகுப்பறைகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 26.09.2023 θό திறந்து வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக, மாநிலத்தின் 34 மாவட்டங்களில் 155.42 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வகுப்பறைகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 26.12.2023 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக, 204.57 கோடி ரூபாய் செலவில் 35 மாவட்டங்களில் உள்ள 1374 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.80.85 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டடம், திண்டுக்கல் மாவட்டம் – தொப்பம்பட்டி மற்றும் ஆத்தூர், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர், சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஆகிய 7 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள். 62 கிராம செயலகம் / கிராம ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள், 150 அங்கன்வாடி மையங்கள், 50 பொது விநியோக கடை / உணவு தானிய கிடங்குகள், என மொத்தம் 80 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 270 கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கீழூர் ஊராட்சியில் ரூ.139.65 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழூர் ஊராட்சி. கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான போதமலையில் கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய மூன்று குக்கிராமங்களை உள்ளடக்கியது. இவ்வூராட்சியில் 1727 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின மக்கள் (Particularly Vulnerable Tribal Groups) வாழ்ந்து வருகின்றனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இவ்வூராட்சிக்கு சரியான சாலை வசதி இல்லாமல் இருக்கிறது.

இங்கு வாழும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கரடு முரடான பாறைகளுடன் கூடிய, ஆபத்தான மலைப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இம்மக்களின் துயர்துடைக்க, நபார்டு திட்டத்தின் கீழ் கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகையில், 139 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு போதமலையில் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இச்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.48.56 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்தல் பள்ளிக்கல்வித் துறை சார்பில் செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சேலம், தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 48 கோடியே 56 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 227 வகுப்பறைக் கட்டடங்கள், 19 ஆய்வகங்கள். 7 கழிப்பறைகள். 3 பள்ளி சுற்றுசுவர்கள். ஒரு நூலகம். ஒரு கலையரங்கம் மற்றும் ஒரு முகப்பு வளைவு ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். பொது நூலக இயக்ககத்தின் கீழ் ரூ.3.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடங்களை திறந்து வைத்தல் “தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும் வகையில், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக் கொள்ளும் வகையிலும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 40 இலட்சம் ரூபாய் செலவில் தமிழறிஞர்கள், சாகித்திய அகாடெமி விருது பெற்றவர்கள்.

தமிழ்மொழி சார்ந்து இயங்கிய பல்துறை தமிழ் அறிஞர்கள் எனப் பிரித்து 180 அறிஞர்களின் ஓவியங்கள் மற்றும் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்புகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி கிளை நூலக வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தரை மற்றும் முதல் தளத்துடன் 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள முசிறி கிளை நூலகக் கட்டடம்: தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் உருவாக முக்கிய பங்காற்றிய இந்திய நூலகத் தந்தை முனைவர் எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களை நினைவு கூரும் வகையில் அவர் பிறந்த இடமான மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் 1 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள முனைவர் எஸ்.ஆர்.அரங்கநாதன் நினைவு நூலகக் கட்டடம்; செந்நாப்புலவர் கார்மேகனார் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய சேவையினை போற்றும் வகையில் அவர் பிறந்த இடமான இராமநாதபுரம் மாவட்டம், அபிராமத்தில் தரை மற்றும் முதல் தளத்துடன் அனைத்து வசதிகளுடன் 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செந்நாப்புலவர் கார்மேகனார் நூலகக் கட்டடம்; என மொத்தம் 3 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், முதன்மைச் செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப. பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன், இ.ஆப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா. பொன்னையா, இ.ஆ.ப., பொது நூலகங்கள் இயக்குநர் கே. இளம்பகவத், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ப. வேலுசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எம்.என். பூங்கொடி, இ.ஆ.ப. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும், தருமபுரி மாவட்டத்திலிருந்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ். செந்தில் குமார். சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.க. மணி, எஸ். சதாசிவம், எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும், நாமக்கல் மாவட்டத்திலிருந்து வனத்துறை அமைச்சர் மருத்துவர் LDIT மதிவேந்தன். நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப.. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

 

The post குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 204 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1374 புதிய வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. ,Chennai ,for Rural Development and Education Department ,School Education Department ,K. Stalin ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...