×

சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக போர்மேன் கைது

விருதுநகர்: சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போர்மேன் சுரேஷ்குமார் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் 4 பெண்கள் உட்பட 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி காரனேசன் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (45). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே ராமத்தேவன்பட்டியில் இயங்கி வருகிறது. நாக்பூர் உரிமம் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் உள்ளன.

இதில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். நேற்று காலை 8.30 மணி அளவில் வழக்கம்போல் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டனர். பகல் 12.45 மணி அளவில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் அறையில் வெடிக்கு மருந்து செலுத்தியபோது ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் அந்த அறை தரைமட்டமானது. மேலும் அதிலிருந்து வெடித்து சிதறிய பட்டாசுகள் அருகில் உள்ள அறைகளுக்கும் பரவி தீப்பற்றி பயங்கரமாக வெடித்துச் சிதறின. இதில் மேலும் 4 பட்டாசு அறைகளும் இடிந்து தரைமட்டமாயின. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பட்டசு ஆலை உரிமையாளர் தலைமறைவான நிலையில் போர்மேனை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

The post சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக போர்மேன் கைது appeared first on Dinakaran.

Tags : Borman ,plant ,Chathur ,Virudhunagar ,Vignesh ,Jayapal ,Borman Sureshkumar ,Wembakota ,Sathur ,Porman Suresh Kumar ,Chhatur ,Dinakaran ,
× RELATED சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து