×

வத்திராயிருப்பு அருகே ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் தீவிரம்

வத்திராயிருப்பு, பிப். 18: வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை விலக்கு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வத்திராயிருப்பு அருகே, மகாராஜபுரம் செல்லும் சாலையில், தாணிப்பாறை விலக்கு பகுதியில் வரும் பிப்.25ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் தூய்மைப் பணிகள் முடிவடைந்து தற்போது வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் காயம் அடையும் மாடுபிடி வீரர்கள், காளைகளை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு 108 ஆம்புலன்ஸ் சென்று வருவதற்கான பாதைகள் அமைக்கும் பணியும், ஜல்லிக்கட்டு விழாவினை தொடங்கி வைக்க வருகை தரும் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் அமர்வதற்கு மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கான இடம் அமைக்கும் பணியும், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

The post வத்திராயிருப்பு அருகே ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Vathrayiru ,Thanipara ,Vathirairipu ,Thanipara Exclusion Zone ,Maharajapuram ,Vathirayiru ,
× RELATED வாகன சோதனையில் புகையிலை பறிமுதல்