×

மாவட்டத்தில் புதிய தானியங்கி மழைமானிகள் அமைக்க ஏற்பாடுகள் தீவிரம்: கலெக்டர் தகவல்

 

விருதுநகர், பிப். 18: விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 43 தானியங்கி மழைமானிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து கலெக்டர் ஜெயசீலன் கூறுகையில், “மாவட்டத்தில் தற்போது 12 மழைமானிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி மழையளவு அளவீடு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படுகிறது. இவற்றில் ஏற்படும் காலதாமதம், அறிவியில் பூர்வ வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாவட்டத்தில் புதிதாக 43 இடங்களில் தானியங்கி மழைமானிகள், 2 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதற்கான கட்டுமானப்பணி மார்ச் 1 முதல் துவங்கும். விருதுநகரில் 4, அருப்புக்கோட்டையில் 5, காரியாபட்டியில் 5, திருச்சுழியில் 7, ராஜபாளையத்தில் 4, திருவில்லிபுத்தூரில் 4, வத்திராயிருப்பில் 3, சிவகாசியில் 4, சாத்தூரில் 5, வெம்பக்கோட்டையில் 2 என மழைமானிகள் அமைக்கப்பட உள்ளன. 2024 வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பாக 43 தானியங்கி மழைமானிகளும் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 43 தானியங்கி மழைமானிகளில் அதிக மழைப்பொழிவை கொண்டிருக்கும் மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதிகளில் 4 மழைமானிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகளை உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது’’ என்றார்.

The post மாவட்டத்தில் புதிய தானியங்கி மழைமானிகள் அமைக்க ஏற்பாடுகள் தீவிரம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar district ,Collector ,Jayaseelan ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...